பிழைப்பதற்கு வழி இல்லாததால் பலர் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், விசா நடைமுறைகளை கடுமையாக்க துபாய் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் வேலைக்காக என்ற போர்வையில் சட்டவிரோதமாக துபாய்க்குள் பலர் நுழைவதை தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சில நாட்டு தொழிலாளர்களுக்கு விசா வழங்க தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எலக்ட்ரீஷியன், பைப் பிட்டர்கள், விவசாயிகள், டிரைவர்கள், டெய்லர்கள், தூய்மை பணி போன்ற வேலைக்கான தொழிலாளர்களுக்கு விசா தடை செய்யப்பட உள்ளது.
Information
Sunday, 23 September 2012
துபாயில் வேலை செய்வதற்கு புதிய விசா கட்டுப்பாடுகள்
பிழைப்பதற்கு வழி இல்லாததால் பலர் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், விசா நடைமுறைகளை கடுமையாக்க துபாய் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் வேலைக்காக என்ற போர்வையில் சட்டவிரோதமாக துபாய்க்குள் பலர் நுழைவதை தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சில நாட்டு தொழிலாளர்களுக்கு விசா வழங்க தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எலக்ட்ரீஷியன், பைப் பிட்டர்கள், விவசாயிகள், டிரைவர்கள், டெய்லர்கள், தூய்மை பணி போன்ற வேலைக்கான தொழிலாளர்களுக்கு விசா தடை செய்யப்பட உள்ளது.
அந்தரத்தில் பழுதாகி நின்றது ராட்டினம் 300 அடி உயரத்தில் திக் திக்.. பயணிகள் 4 மணி நேரம் தவிப்பு
கலிபோர்னியா : அமெரிக்காவில் உள்ள பொழுதுப்போக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் சிக்கி 20 சுற்றுலா பயணிகள் 4 மணி நேரம் தவித்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது நாட் பெர்ரி பார்ம் பொழுதுப் போக்கு பூங்கா. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள ராட்சத ராட்டினம் மிகவும் திரில்லிங்காக இருக்கும். வெறும் 3 நிமிடங்கள் மட்டும் 300 அடி உயரத்தில் சுற்றிவிட்டு தரையிறங்கும். ராட்டினத்தில் சுற்றும் போது வானில் பறப்பது போன்ற பரபரப்பு காணப்படும்.
கடந்த புதன்கிழமை மாலை 4.40 மணிக்கு இந்த ராட்டினத்தில் 20 பேர் சுற்றிவர இருக்கைகளில் அமர்ந்தனர். இயந்திரத்தை இயக்கியவுடன் ராட்டினம் 300 அடி உயரத்துக்கு சென்றது. அங்கு சென்ற பின் ராட்டினம் 3 நிமிடம் அதிவேகத்தில் சுற்ற வேண்டும். ஆனால், ராட்டினத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. அந்தரத்தில் இருந்த 20 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த பூங்கா அதிகாரிகள், யாரும் பயப்பட வேண்டாம். விரைவில் இயந்திரத்தை சரிசெய்து விடுவோம் என்று ஒலிபெருக்கியில் அறிவித்தனர்.
இன்ஜினியர்கள் வந்து பழுது பார்க்க தொடங்கினர். அதற்குள் இருட்டி விட்டது. பொழுதுப் போக்கு பூங்கா பார்வை நேரமும் முடிந்து மூடப்பட்டது. நான்கு மணி நேர போராட்டத்துக்கு பிறகு ராட்டினத்தை பத்திரமாக கீழே இறக்கினர். இதுகுறித்து பூங்கா நிர்வாகம் கூறுகையில், ராட்டினத்தில் இருந்தவர்கள் யாருக்கும் பாதிப்பில்லை. சிலர் அந்தரத்தில் காலாட்டிக் கொண்டு ஜாலியாகத்தான் இருந்தனர் என்று தெரிவித்துள்ளது. கடந்த 7ம் தேதியும் ராட்டினம் அந்தரத்தில் சென்ற போது இயந்திர கோளாறு காரணமாக நின்று விட்டது. இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.
கூண்டுக்குள் குதித்தவரை கடித்து குதறிய புலி
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரான்ஸ் மிருகக்காட்சி சாலையில் புலிகள் இருக்கும் பகுதிக்குள் வேலியை தாண்டி ஒருவர் குதித்தார். அதைக் கண்ட 12 வயது புலி ஒன்று அவரை கடித்து குதறி விட்டது. அவரது மரண ஓலத்தைக் கேட்ட மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் கார்பன்டை ஆக்சைடு தீயணைப்பு கருவி மூலம் காற்றை பீய்ச்சி அடித்து அந்த புலி அவரை விட்டு விலகிச் செல்லுமாறு செய்தனர். பின்னர் அந்த இளைஞரை வேலிக்கு கீழே இருக்கும் சிறிய இடைவெளி வழியாக வருமாறு கூறி மீட்டனர்.
குவைத் சிறையில் 1, 500 இந்தியர்கள் ; விசா விதி மீறல் வழக்கில் சிக்கியவர்கள்
வேலை விஷயமாக பிழைக்க குவைத் சென்றவர்கள் 1, 500 க்கும் மேற்பட்ட
இந்தியர்கள் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் இவர்களை மீட்கும் பணியினை
துரிதப்படுத்த இரு நாட்டு அரசுகளும் இணைந்து பேசி நல்லதொரு முடிவை எடுக்க
வேண்டும் என்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக்கெய்லாட் பிரதமருக்கு
கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சமீப காலமாக குவைத் அரசாங்கத்தின் கெடுபிடிகள் அதிகரித்து வருகிறது.
வெளிநாட்டில் சென்று பணியாற்றும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு பிரச்னையும்
சட்டரீதியிலான தொந்தரவும் அதிகரித்து வருகிறது.சமீப காலங்களில் விசா விதிகள் மீறியதாக இது வரை ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டார் அங்கு சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகம் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தலையிட வேண்டும். பிரதமர் அலுவலகம் முறையான நடவடிக்கைகைள மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
Subscribe to:
Comments (Atom)